ரத்தக் கொதிப்பிற்கான மருந்தில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனமா?

--

நியூயார்க்: ரத்தக் கொதிப்பு நோய்க்கு வழங்கப்படும் வல்சர்டான் என்ற மருந்தில், புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன்மூலம், பல கோடி மக்களுக்கு மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களின் நம்பகத்தன்மை குறித்த கேள்வி எழுந்துள்ளது.

டைமதில்ஃபார்மடைட்(டி‍எம்எஃப்) என்ற பெயர்கொண்ட அந்த ரசாயனம்தான், வல்சர்டான் என்ற ரத்தக் கொதிப்புக்கான மருந்தில் கலந்துள்ளது. இது புற்றுநோயை உண்டாக்கவல்லதாகும்.

இந்த ரத்தக்கொதிப்பு மருந்து உலகின் பல பிரபல மருந்து நிறுவனங்களால் தயாரிக்கப்படுகிறது. அவற்றில் முக்கியமானது சுவிட்சர்லாந்தின் நோவர்டிஸ் ஏஜி நிறுவனம்.

உலக சுகாதார நிறுவனத்தால், இந்த டிஎம்எஃப், புற்றுநோய்க்கான காரணியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. வல்சர்டான் என்பது சில பத்தாண்டுகளாக ரத்தக் கொதிப்பு நோய்க்கு வழங்கப்படும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் மருந்து மூலக்கூறு தொடர்பான வழங்கல் நெட்வொர்க் கேள்விக்குறியாகியுள்ளது.