இந்திய ரூபாயின் மதிப்பு இன்று  வரலாறு காணாத சரிவு

டில்லி

மெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது.

சமீபகாலமாக துருக்கியின் நாணயமான லிராவின் மதிப்பு கடுமையாக சரிந்து வருகிறது.  அத்துடன் கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இதனால் அனைத்து நாடுகளின் நாணயங்களும் மதிப்பு குறைந்து வருகிறது.

மேலும் இந்தியாவுக்கு வரும் அந்நிய நேரடி முதலீடுகளும் குறைந்து வருவதால் கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு மிகவும் சரியத் தொடங்கி உள்ளது.    இன்று ரூபாய் மதிப்பு பெருமளவில் சரிந்து வரலாறு காணாத நிலையில் சரிவு உள்ளது.

இன்று காலை அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் ரூ.70.52 ரூபாயாக சரிந்துள்ளது.    இந்திய ரூபாயின் மதிப்பு இவ்வளவு சரிந்தது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.