இந்திய ரூபாயின் மதிப்பு இன்றும் தொடர்ந்து சரிவு

மும்பை

மெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மேலும் 23 பைசா குறைந்து புதிய வரளாற்றை படைத்துள்ளது.

துருக்கி நாட்டு நாணயமான லிராவின் மதிப்பு பெருமளவில் குறைந்து வருகிறது.   அதனால் டாலருக்கு இணையான ஆசிய நாடுகளின் நாணயங்களின் மதிப்பும் குறைந்துள்ளது.   கச்சா எண்ணெய் விலை ஏற்றமடைந்துள்ளதாலும் சர்வ தேச சந்தையில் இறக்குமதியாளர்களின் அமெரிக்க டாலர் தேவை அதிகரித்ததாலும் இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மேலும் சரிந்தது.

நேற்று அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 70.59 ஆக இருந்தது.   இன்று அது மேலும் 23 பைசா குறைந்து தற்போது ரூ.70.82 ஆகி மற்றொரு வரலாற்றை  படைத்துள்ளது.   இந்த ரூபாய் மதிப்புக் குறைவால் பங்கு வர்த்தகம் உள்ளிட்ட் பல துறைகளில் கடும் பாதிப்பு எற்பட்டுள்ளது.