டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிவு

டில்லி

மெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று மேலும் சரிந்துள்ளது.

துருக்கி நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்த்து.   அத்துடன் துருக்கியின் முக்கிய ஏற்றுமதியான இரும்பு மற்றும் அலுமினிய பொருட்களுக்கான வரியை கடுமையாக உயர்த்தியது.   இதனால் துருக்கி நாட்டின் பண மதிப்பு வெகுவாக குறைந்தது.   இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பணமதிப்பு குறைந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாகவே மள மள வென சரிந்து வருகிறது.  தற்போது துருக்கி நாட்டின் பண மதிப்புச் சரிவும் சேர்ந்து மேலும் மதிப்பு குறைந்துள்ளது.    நேற்று முன் தினம் காலை வரலாறு காணாத அளவுகு இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.70.1 ஆக சரிந்தது.

மாலையில் அது சற்றே உயர்ந்து ரூ.69.89 ஆகியது.  இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும்  மீண்டும் டாலருக்கு நிகரான இந்திய ருபாய் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடைந்தது   செவ்வாய்க்கிழமை இருந்ததை விட மேலும் 43 காசுகள் குறைந்துள்ளது.   தற்போது அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு ரு.70.32 ஆகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Value of INR against USD is reduced tu Rs 70.32
-=-