வெளியானது ‘வானம் கொட்டட்டும்’ டீசர்…!

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’.

தனா இயக்கும் இப்படத்தின் கதையை இயக்குநர் மணிரத்னம், தனாவுடன் சேர்ந்து எழுதியிருக்கிறார். பாடகர் சித் ஸ்ரீராம், இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். விவேக் பாடல்கள் எழுதுகிறார்.

விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க, சரத்குமார், ராதிகா சரத்குமார், அமிதாஷ் பிரதான், சாந்தனு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் இப்படத்தின் தலைப்பு வெளியான நிலையில், தற்போது படத்தின் டீஸரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தினை டீஸரினை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார்.

இறுதி கட்ட பணிகள் முடிந்து இத்திரைப்படம் பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed