வாணி போஜனின் ‘கேசினோ’ படம் குறித்த தகவல்…..!

சின்னத்திரையில் தெய்வமகள் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் வாணி போஜன்.

விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் தெலுங்கில் இவர் நடித்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து அசோக் செல்வன்,ரித்திகா சிங் நடித்த ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் உருவாகி வரும் தமிழ் வெப் சீரிஸ் உட்பட சில வெப் சீரிஸ்களில் வாணி போஜன் நடித்து வருகிறார்.

வைபவ் ஹீரோவாக நடித்துள்ள லாக்கப் படத்திலும் வாணி போஜன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பர்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆதவ் கண்ணதாசன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வாணி போஜன் ஹீரோயினாக நடிக்கிறார்.

தற்போது வாணி போஜன் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்திற்கு கேசினோ என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சச்சின் பட இயக்குனர் ஜான் மஹேந்திரன் நடிக்கவுள்ளார்.