‘ஹரே ராம்’ வாசகங்கள் அடங்கிய ஆடை அணிந்து சர்ச்சையில் சிக்கிய நடிகை…!

‘ஆஹா கல்யாணம்’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பாலிவுட் நடிகை வாணிகபூர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தள பக்கத்தில் வாணிகபூர் கவர்ச்சி மேலாடை அணிந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் ‘ஹரே ராம்’ ‘ஹரே கிருஷ்ணா’ என்ற வாசகம் இருந்தது.

இந்து கடவுள்களை அவமதிப்பது போன்று வாணிகபூர் மேலாடை உள்ளது என்று எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில், மும்பையை சேர்ந்த ராமா சாவந்த் என்பவர் ராமர் பெயர் எழுதிய அரைகுறை ஆடை அணிந்து இந்துக்கள் மனதை வாணிகபூர் புண்படுத்தி விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜோஷிமார்க் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.