தெலுங்கில் வெளியாகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்தப்படம் ‘கபீர்சிங்’ என்ற பெயரில் இந்தியில் ‘ரீ-மேக்’ செய்யப்பட்டது. ஷாகித் கபூரும், ஹியரா அத்வானியும் ஜோடியாக நடித்திருந்தனர்.

கதாநாயகன் இல்லத்தில் வீட்டு வேலை பார்க்கும் பெண்ணாக வனிதா காரத் என்பவர் நடித்திருந்தார். இவரது நிஜப்பெயரும், அந்த கேரக்டர் பெயரும் வனிதா காரத் தான்.

வனிதா அண்மையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

செழிப்பான உடல் கட்டு உள்ள வனிதா, தனது இன்ஸ்டாகிராமில் தனது நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

“எனது உடம்பை நினைத்து பெருமைப்படுகிறேன். நான், நானாகவே இருக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை வரவேற்றுள்ளனர்.

“இந்த போட்டோ ஆபாசமாக இல்லை. அழகாக உள்ளது” என நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.

இந்தி படத்தில் மட்டுமல்லாது, ஏராளமான மராத்தி சினிமாக்களிலும் வனிதா காரத் நடித்துள்ளார்.

– பா. பாரதி