பீட்டர்பாலுடன் வனிதா மகள்கள் நெருக்கமாயினர்.. ஃபாதர் வேற… டாடி வேற

டிகை வனிதா பீட்டர் பாலை 3வதாக திருமணம் செய்துகொண்டார் , அதற்கு வனிதாவின் 2 மகள்களும் சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி இந்த திருமணத் தை எதிர்த்து போலிசில் புகார் அளித்தார். சில நடிகைகளும் வனிதாவை வம்பிக்கிழுத்தனர். அதற்கு பதிலடி கொடுத்த நிலையில் தனது வாழ்க்கையை பீட்டர் பாலுடன் சந்தோஷமாக நடத்தி வருகிறார் வனிதா.


இன்ஸ்டாகிராமில் வனிதா இரண்டு புகைப்படங்கள் பகிர்ந்திருக்கிறார். பீட்டர் பால் தோள் மீது தந்தை பாசத்துடன் வனிதா மகள் சாய்ந்திருக்கிறார். அப்படத் தில், ’உண்மையான அப்பா (ஃபாதர்) என்பது வேறு ஒரு தந்தை (டாடி) என்பவர் மாறுபட்டவர். ஒரு தந்தை, தாய் ஆவார். ஒரு தாய் எல்லாமும் ஆவார்’ என தத்துவம் வெளிப்படுத்தி இருக்கிறார்.

 

மற்றொரு படத்தில், ‘ஒருபோதும் உண்மையான தந்தை இல்லாதவர்களுக்கு..’ எனக் குறிப்பிட்டிருக்கிறார் வனிதா.