பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த தர்ஷன் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார் .

இவருக்கு பல வகையில் உதவி செய்திருக்கும் நடிகை சனம் ஷெட்டி, தர்ஷன் தன்னை பயன்படுத்திக் கொண்டு தூக்கி எறிந்துவிட்டார், என்று போலீசில் புகார் அளிக்க, அதற்கு மறுப்பு தெரிவித்த தர்ஷன், திருமண நிச்சயதார்த்தத்திற்கு பிறகு சனம் ஷெட்டி, அவரது முன்னாள் காதலருடன் இரவு பார்ட்டி பண்ணிணார், இதுபோல் அவர் பல தவறுகளை செய்துள்ளார், அதற்காக ஆதாரங்கள் தன்னிடம் இருக்கிறது, என்று பேட்டி அளித்தார்.

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 3 யின் அதிரடி போட்டியாளரான வனிதா, தர்ஷன் மீது தான் தவறு, சனம் ஷெட்டியை அவன் ஏமாற்றிவிட்டார், என்று வெளிப்படையாக கூறியதோடு, தர்ஷன் சனம் ஷெட்டி பற்றி கூறிய குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பும் தெரிவித்தார்.