அருண் விஜய்யும் சகோதரிகளும் என்னை ஏமாற்றி, கை கழுவி விட்டனர் : வனிதா விஜயகுமார்

தனது குடும்பத்தாருடன் கருத்து வேறுபாட்டினால் சில வருடங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகிறார் வனிதா விஜயகுமார்.

சொத்தில் பங்கு கேட்டு வனிதா தகராறு செய்ய, காவல் துறை வரை இந்தப் பிரச்சினை சென்றது. மேலும், வனிதாவின் மூத்த மகன், அவருடன் இல்லாமல், விஜயகுமாருடன் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தன்னுடைய எல்லா துன்பங்களுக்கும் அருண் விஜய்யும் சகோதரிகளும்தான் காரணம் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் வனிதா விஜயகுமார்.

என் சொந்தக் குடும்பத்தாலேயே வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டேன். சினிமாவில் இருப்பவர்கள் எதிர்கொள்ளும் அதே பிரச்சினைகளைத்தான் நானும் எதிர்கொள்கிறேன். எளிதில் வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை. தர்மசங்கடமாக, அவமானமாக இருக்கிறது. நான் மூன்று குழந்தைகளின் தாய். அதில், 2 பேர் பெண்கள்.

நான் இந்தத் துன்புறுத்தலை அனுபவிக்கக் காரணம் அருண் விஜய்யும், எனது மற்ற சகோதரிகளும்தான். அவர்கள், என் அம்மாவின் சொத்தில் சந்தோஷமாக வாழ்கிறார்கள். என்னை ஏமாற்றி, கை கழுவி விட்டனர். எனது குழந்தைகள் இப்படி இருக்க என்ன தவறு செய்தனர்? ஒவ்வொரு விஷயத்தையும் நான் தனியாளாகக் கடந்து வந்திருக்கிறேன். கடவுள் எப்போதும் என் பக்கம் இருந்திருக்கிறார்” என வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.