பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்யும் வனிதா விஜயகுமார்……!

1995-ம் ஆண்டு விஜய் நடித்த ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார்.

2000-ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை 19 வயதில் திருமணம் செய்து கொண்டார் வனிதா. அவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2007-ல் விவாகரத்து பெற்றார். விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர்.

பின்னர், ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை 2007-ல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணமும் 2010-ல் முடிவுக்கு வந்தது. இவர்களுக்கு ஜெயந்திகா என்ற மகள் இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் வனிதா விஜயகுமார் பிரபலமானார்.

இதனிடையே பீட்டர் பால் என்பவருடன் திருமணம் என்று திருமணப் பத்திரிகையும் வெளியானது.

 

ஜூன் 27-ம் தேதி மாலை 4 மணியளவில் பீட்டர் பால் என்பவருடன் வனிதா விஜயகுமாருக்குத் திருமணம் நடைபெறவுள்ளது.