‘அந்தகன்’ படப்பிடிப்பு தளத்தில் தன் யூடியூப் சேனலில் லைவில் வந்த வனிதா விஜயகுமார்….!

அந்தகன் பிரசாந்துக்கு கம்பேக் படமாக அமையும் என்று நம்பப்படுகிறது. அந்த படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்து வருகிறார்.

தபு கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்கிறார். சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவர் மனைவியாக வனிதா விஜயகுமார் நடிக்கிறார்.

படப்பிடிப்பு தளத்தில் கேரவனில் இருந்தபடியே லைவ் வீடியோ ஒன்றை தன் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார் வனிதா.

கோடை காலத்தில் எவ்வளவு மேக்கப் போட்டாலும் வியர்த்து எல்லாம் நாசமாகிவிடும். அதனால் தான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக வனிதா கூறியுள்ளார். படத்திற்காக மேக்கப் போட்டது மாதிரியும் ஆகிவிட்டது, தன் யூடியூப் சேனலில் லைவில் வந்ததுமாகிவிட்டது.