வனிதா விஜயகுமார் தன் மகன் விஜய ஸ்ரீஹரி விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீஹரியின் பிறந்தநாள் அன்று எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்களில் விஜய்யின் மனைவி சங்கீதாவும் இருக்கிறார்.

வரும் ஜூன் 27ம் தேதி பீட்டர் பால் என்பவருடன் மூன்றாவது திருமணம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகிய இவருக்கு 2பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/CBx59omFB7I/

இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தளபதி விஜய்யுடன் வனிதாவின் மகனான விஜய் ஸ்ரீஹரி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த 1995ல் நம்பிராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் வனிதா விஜயகுமார் நடித்திருந்தார். விஜய்யின் நல்ல நண்பரான வனிதாவின் வீட்டில் விஜய் ஸ்ரீஹரியின் முதல் பிறந்தநாளுக்கு தளபதி மற்றும் சங்கீதா வந்துள்ளனர். அப்போது குழந்தைகளுடன் விளையாடும் தளபதியின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் வனிதா. தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.