பாஜகவில் நான் சேர்கிறேனா….?: வனிதா விளக்கம்….!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு பிறகு வனிதா விஜயகுமாரின் வாழ்க்கையே மாறிவிட்டது. லாக்டவுனில் தன் பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி நடத்தி வருகிறார்.

பீட்டர் பாலை காதலித்து கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். துவங்கிய வேகத்திலேயே பிரச்னையும் தொடர்ந்தது .திருமண வாழ்க்கை மீது நம்பிக்கை வைத்து பீட்டர் பாலை திருமணம் செய்து ஏமாந்துவிட்டேன் என்று கூறி வனிதா கண்ணீர் வடித்தார்.

இந்நிலையில் வனிதா பாஜகவில் சேரப் போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து வனிதா பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, பாஜகவில் சேர்வது பற்றி நானே தெரிவிப்பேன். ஆனால் தற்போதைக்கு அது பற்றி எதுவும் சொல்ல முடியாது என்றார்.