ஆய்வாளருக்கு கொரோனா: வாணியம்பாடி காவல்நிலையம் மூடல்…

வாணியம்பாடி:

வாணியம்பாடி பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள காவல் ஆய்வாளருக்கும் கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அந்த காவல் நிலையம் மூடப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக  மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதையடுத்து  வாணியம்பாடி நகர் முழுவதும் 100% கொரோனா கட்டுப்படுத்தப் பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாணியம்பாடி கிராமிய காவல்நிலைய பெண் ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பது உறுதியாகி உள்ளது.  அவர்  வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

இதையடுத்து, அந்த காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த  43 காவலர்களும் தனிமைப்படுத்தப் பட்டு உள்ளனர்.  இதைத் தொடர்ந்து, அவர், தங்கியிருந்த செட்டியப்பனூர் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வாணியம்பாடி கிராம காவல் நிலையமும் பூட்டப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி