திண்டிவனம்:

பாமகத் தலைவர் ராமதாஸ், வன்னியர் அறக்கட்டளையை தனது பெயரில் மாற்றம் செய்துள்ளார். இது வன்னிய மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

வன்னியர் மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் தொடங்கப்பட்ட வன்னியர் அறக்கட்டளை மற்றும் அறக்கட் டளைக்கு சொந்தமான பள்ளிக் கல்லூரிகள், சொத்துக்கள் அனைத்தும்,  பாமகத் தலைவர் ராமதாஸ்,  தனது பெயரி லான அறக்கட்டளைக்கு மாற்றி உள்ளார்.

சமூக நீதிக்காக போராடுகிறேன், வன்னியர் மக்களுக்காக வாழ்கிறேன் என்று கூறி  அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தவர் ராமதாஸ். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, திண்டிவனத்தில்  சாதாரண டாக்டராக தொழில் செய்து வந்த ராமதாஸ், இன்று பலஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாகவும்,  பல்வேறு  அறக்கட்டளைகளை நிர்வகிப்பவராகவும் இருந்து வருகிறார்.

ஆயிரக்கணக்கான அப்பாவி வன்னியர்களின் கூட்டு முயற்சியால் அறக்கட்டளை தொடங்கப்பட்டு, வன்னியர் சமூதாய மக்களுக்காக தொடங்கப்பட்ட கல்வி நிலையங்களையும், சொத்துக்களையும், தன் குடும்ப சொத்தாக மாற்றி வருகீறார்.

திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, “வன்னியர் சங்க அறக்கட்டளையை தொடங்கி வைத்தார். இந்த அறக்கட்டளைக்கு  திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பத்தில் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில், கல்லுரி உள்பட பல நிறுவனங்கள் உள்ளன. அங்கு செயல்பட்டு வரும்,  டாக்டர் ராமதாஸ் மனைவி பெயரில் சரஸ்வதி பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரியும்  வன்னியர்  அறக்கட்டளைக்குச் சொந்தமானதுதான்.

ஆனால், தற்போது இந்த கல்லூரி மற்றும் கோனேரிக் குப்பத்தில் உள்ள வன்னியர் அறக்கட்டளையை, ராமதாஸ் அறக்கட்டளை என்று தனது பெயரில் மாற்றம் செய்துள்ளார்.

வன்னியர் சங்க அறக்கட்டளையில், ராமதாஸ், அவரது மனைவி சரஸ்வதி, ராமதாசின் சம்பந்தி கோவிந்தராஜ், காடுவெட்டி குரு போன்றவர்கள் முக்கிய உறுப்பினர்களாக இருந்து வந்தனர். ஆனால், காடுவெட்டி குரு மறைவுக்கு பிறகு, தனது ஆதரவாளரான பு.தா.அருள்மொழியை  வன்னியர் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதற்கு காடுவெட்டியின் குருவின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிதனர். இந்த நிலையில், தற்போது,  வன்னி யர் சங்க அறக்கட்டளை டாக்டர் ராமதாஸ் அறக்கட்டளை என்று ஆவண ரீதியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் டிரஸ்டு மெம்பர்களாக டாக்டர் அன்புமணி, சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் ஆர்ஜி என்கிற கோவிந்தசாமி, ஜி.கே.மணி, சமூக முன்னேற்ற சங்க தலைவர் சிவப்பிரகாசம், சேலம் சுந்தர்ராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதை உறுதி செய்யும் வகையில், நேற்று திண்டிவனம் அருகே உள்ள கோனேரிக்குப்பத்தில் உள்ள  வன்னியர் அறக்கட்டளை என்ற அறிவிப்பு பலகைகள் மாற்றப்பட்டு ராமதாஸ் அறக்கட்டளை என்று மாற்றம் செய்யப்பட்ட பதாதைகள் வைக்கப்பட்டு உள்ளது. இதை காணும் வன்னிய இன மக்கள் ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர்.

ன்னியர் மக்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணிப்பதாக கூறி வன்னியர் சங்கம் தொடங்கிய ராமதாஸ் பின்னர், அதை பாட்டாளி மக்கள் கட்சி என்று அறிவித்து அரசியலுக்குள் கால் பதித்தார். ஆரம்ப காலத்தில் தனது குடும்ப உறுப்பினர் யாரும் பதவிக்கு வரமாட்டார்கள் என்று கூறி வன்னிய இன மக்களிடையே வரவேற்பு பெற்ற ராமதாஸ் பின்னர், தனது மகனுக்கு மத்தியஅமைச்சர் பதவி பெற்று, தனது கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டார். மேலும் தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, வன்னியர் சமூகத்திற்கு பச்சை துரோகம் செய்து, கோடிக்கணக்கில் சம்பாதித்தாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கிடையில் வன்னியர் அறக்கட்டத் தலைவர் காடுவெட்டி குரு பல மாதங்களாக சிகிச்சையில் இருந்தபோது, ராமதாஸ் மற்றும் அறக்கட்டளைகூட, எந்த உதவியும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இதை குருவினர் உறவினர்களே வெளிப்படையாக கூறினர். குருவின் மகன் ராமதாசுக்கு எதிராக தனிச்சங்கம் தொடங்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், வன்னியர் அறக்கட்டளை மற்றும் சொத்துக்களை தனது பெயரில் ராமதாஸ் மாற்றம் செய்துள்ளது வன்னிய இன மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திஉள்ளது.

அதுபோல, வன்னியர் சமூக மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட சொத்துக்களை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த  2013-ல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.