ந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை வேறு லெவலுக்கு கொண்டாடுங்கள் என்றும்… பாக்கெட் பாலேல்லாம் போதாது… அண்டாவில் கொண்டு கட்அவுட்டுக்கு பால் அபிசேகம் செய்யுங்கள் என்று  தனது ரசிகர்களுக்கு  சிம்பு வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டு உள்ளார். இது வைரலாகி வருகிறது.

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் வந்தா ராஜாவா தான் வருவேன். இந்த  படத்தில் மேகா ஆகாஸ், கேத்தரின் தெரேசா, பிரபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா புரொடெக்சன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். வரும் பிப்ரவரி 1ம் தேதி இப்படம் ரிலீஸாக உள்ளது.

இதையொட்டி பொங்கல் பண்டிகையின்போது,  தனது ரசிகர்களுக்கு சிம்பு வீடியோ மூலம் ஒரு அன்பு  வேண்டுகோள் விடுத்திருந்தார். அதில்,  பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ள சிம்பு, வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், வரும் பிப்ரவரி 1ம் திரைக்கு வரும் என்றும், தனது படத்தின்  டிக்கெட்டுகளை அதிக பணம் தந்து பிளாக்கில் வாங்கி படம் பார்க்க வேண்டாம் எனக்கேட்டுக் கொண்ட சிம்பு, தனது கட்அவுட்டுக்கு பாலாபிசேகம் போன்றவற்றை  செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

உங்கள் அப்பா, அம்மா, தான் உங்களுக்கு எல்லாமே. எனவே,  இந்த தடவை பால் அபிஷேகம் செய்வதற்கு பதிலாக உங்க அம்மாவுக்கு ஒரு புடவை. அப்பாவுக்கு ஒரு ஷர்ட்.  தம்பி தங்கைக்கு ஒரு சாக்லேட் வாங்கி கொடுத்து, அது சம்பந்தமான  ஒரு போட்டோவை நீங்கள் பதிவிட்டால் அதைவிட எனக்கு வேறு சந்தோஷம் எதுவுமில்லை. பேனர் கட் அவுட் வைத்து கெத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை. நான் படத்தில் நடித்து உங்கள் பெயரை காப்பாற்றுகிறேன் எனக்காக நீங்கள் இதை செய்யுங்கள் என்று கூறியிருந்தார்.

சிம்புவின் இந்த வேண்டுகோளுக்கு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடைம் இருந்தும்  பெரும் வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், சிலர், சிம்புவுக்கு ரசிகர்களே கிடையாது என்று.. அவர் யாருக்கு இந்த அறிவுரை கூறுகிறார் என்று நக்கலடித்தனர்.

இதையடுத்து, தற்போது சிம்பு தனது ரசிகர்களுக்கு புது வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.

நமக்கு பேன்ஸ் கிடையாது… 2.. 3 பேன்ஸ்தான் இருக்காங்க என்று கூறும் அந்த சிலருக்கு தெரியப்படுத்தும் வகையில்,  “என் கட் அவுட்டுக்கு அண்டாவில் எடுத்துட்டுவந்து பால் ஊத்துங்கள்”  என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  வீடியோவில், சிம்பு, தனது கட்அவுட்டுக்கு பாக்கெட் பால் எல்லாம் போதாது…. அண்டா அண்டாவாக  கொண்டு வந்து தனது கட்அவுட்டுக்கு பால் அபிசேகம் செய்யுங்கள் என்றும்,  வந்தா ராஜாவா தான் வருவேன் பட வெளியீட்டை வேறு லெவலுக்கு கொண்டாட வேண்டுமென தனது ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது… சிம்புவின் வீடியோவை நீங்களும் பாருங்களேன்…