வந்தா ராஜாவாதான் வருவேன் வெளியானது: பால், பிஸ்கட் வழங்கி சிம்பு ரசிகர்கள் அசத்தல்

 

புதுச்சேரி:

டிகர் சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியானது. இதையொட்டி சிம்பு ரசிகர்கள், பொதுமக்களுக்கு பால், பிஸ்கட் போன்ற உணவு பொருட்கள் வழங்கி அசத்தி உள்ளனர் புதுச்சேரி ரசிகர்கள்.

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் வந்தா ராஜாவா தான் வருவேன். இந்த  படத்தில் மேகா ஆகாஸ், கேத்தரின் தெரேசா, பிரபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா புரொடெக்சன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.  இந்த படம் இன்று தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி உள்பட பல மாநிலங்களில் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை வேறு லெவலுக்கு கொண்டாடுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்ட சிம்பு,.. பாக்கெட் பாலேல்லாம் போதாது… அண்டாவில் கொண்டு வந்து தனது கட்அவுட்டுக்கு பால் அபிசேகம் செய்யுங்கள் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து, அவரது ரசிகர் ஒருவர் அண்டாவில் பால் கொண்டு வந்து கட்அவுட்டுக்கு அபிசேகம் செய்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை யடுத்து மீண்டும் விளக்கம் கொடுத்த சிம்பு, தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறியவர், திரைப்படம் வெளியாகும்போது படம் பார்க்க வருபவர்களுக்கு பால், பழம், பிஸ்கட் போன்றவற்றை கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில், இன்று சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வெளியானது.

இதையொட்டி புதுச்சேரி மாநில சிம்பு ரசிகர்கள், படம் வெளியான தியேட்டர் களில், படம் பார்க்க வந்தவர்களுக்கு சூடான் பால் மற்றும் பிஸ்கட்டுகளை வழங்கி அசத்தி விட்டனர். இது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.