‘கண்ணாமூச்சி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் வரலட்சுமி சரத்குமார்….!

2012-ம் ஆண்டு ‘போடா போடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார்.

சமீபமாக தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் வரலட்சுமி நடித்து வருகிறார். தற்போது அவர் இயக்குநராக முடிவெடுத்து, தனது புதிய படத்தையும் அறிவித்துள்ளார்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘கண்ணாமூச்சி’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளராக கிருஷ்ண சாமி, இசையமைப்பாளராக சாம் சி.எஸ். ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இந்நிலையில் ‘கண்ணாமூச்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.