மிருகங்களைத் தூக்கில் போட நமது நீதித்துறைக்கு 7 வருடம் ஆகியிருக்கிறது : வரலட்சுமி

2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பவன் குப்தா, முகேஷ் சிங், அக்சய் குமார் சிங், வினய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் டெல்லி திஹார் சிறையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதனை பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக வரலட்சுமி கூறியிருப்பதாவது :-

நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்டார். ஒரு போராளியாக இறந்தார். இந்த (குற்றத்தைச் செய்த) மிருகங்களைத் தூக்கில் போட நமது நீதித்துறைக்கு 7 வருடம் ஆகியிருக்கிறது. ஆனால் நிர்பயாவின் வாழ்வை நாசமாக்க குற்றவாளிகள் 7 நிமிடங்கள் கூட யோசிக்கவில்லை. பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டை என்பது இப்போதாவது தரப்பட வேண்டும்.