மாங்கல்ய வரம் தரும் வரலட்சுமி விரதம் இன்று….

ன்று வரலட்சுமி விரதம்.  லட்சுமி என்ற  பெண் தெய்வத்தை பெண்கள் விரதமிருந்து பூஜிக்கும் ஒரு தினம் தான்  வரலட்சுமி விரதம். இளம்பெண்கள் மாங்கலம் வரம் வேண்டி பூஜை செய்து தங்களது மாங்கல்ய வரம் தரும் வரலட்சுமி விரதம் இன்று….

இந்த வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று கடைபிடிக்க வேண்டும். வரலட்சுமி விரதம் 2 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த பூஜை செய்வதால் செல்வம் பெருகும் என்பதும் நம்பிக்கை. இன்றைய நாளில் வீடுகளில் பூஜை செய்து,  வரலட்சுமி விரதம்   இருந்தால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

இந்த விரதத்தை  சுமங்கலிகள், தாலி பாக்கியத்துக்காகவும், சுபிட்சம், சௌபாக்கியம் போன்றவற்றுக்காகவும் இந்த விரதத்தை மேற்கொக்றிர்கள். கேட்கும் வரங்களைத் தரும் லட்சுமி தேவியை பூஜித்தல் இதன் சிறப்பு.

திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத் துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம்.

பெண்களின் பெருமையை போற்றும்  இந்த விரத்தை அனுஷ்டிக்க சொன்னது  ஸ்ரீமகாலக்ஷ்மியேதான் என்கிறது புராணம். சாருமதி எனும் பக்தையின் கனவில் வந்து மகாலக்ஷ்மியே மாங்கல்ய பாக்கியம் தரும் இந்த விரதத்தை அருளினாள் என்பது புராண வரலாறு.

வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ள நினைபவர்கள்  வீட்டை நன்றாக கழுவி சுத்தம் செய்துவிட்டு வீட்டின் தென் கிழக்கு மூலையில் தரையில் கோலமிடவேண்டும். அந்தக் கோலத்தின் மீது, மணைப்பலகையை சுத்தப்படுத்தி வைக்கவேண்டும். உங்களின் வசதிக்கு ஏற்றவாறு மலர்களால் அலங்காரம் செய்து, அதன்மேல், வரலட்சுமியின் சிலையை வைத்து பூஜை செய்யலாம்.

அம்மன் சிலை அல்லது படம் எது வைத்திருக்கிறோமோ அதன்முன்பு வாழை இலை விரித்து அதில் அரிசி பரப்பி ஒரு கலசத்தை அதன் மீது வைக்க வேண்டும். கலசத்தில் அரிசி அல்லது துவரம் பரும்பு ஏதேனும் ஒன்றை  இட்டு மாவிலை சுற்றி அதன் மேல் ஒரு தேங்காய் வைக்க வேண்டும். தேங்காய்க்கு மஞ்சள் குங்குமம் இடுவது அவசியம். அதே போல கலசத்திற்கு சந்தனம் பூசி அதன் மீது அம்மனின் முகத்தை வரைவது நல்லது.

அத்துடன் கருகமணி, வளையல், சீப்பு, கண்ணாடி, எலுமிச்சை, குங்குமம் நிறைந்த சிமிழ், சில்லறைக்காசுகள் கொஞ்சம் போடவேண்டும். வசதியிருப்பின் வெள்ளி அல்லது தங்கக்காசுகள் போடலாம். அதே சொம்புக்குள் அதாவது கலசத்துக்குள், வெற்றிலை பாக்கு வைக்கலாம்.

முதல்நாள் இப்படியெல்லாம் வைத்து விரதத்தை மேற்கொள்ளவேண்டும்.  கலசத்தின் வாய்ப்பகுதியில் மாவிலைக் கொத்துகளை வைக்கவும். பிறகு தேங்காய்க்கு மஞ்சள் குங்கும மிட்டு, மாவிலைக் கொத்தின் மீது வைக்கவும். மஞ்சள் சரடு ஒன்றுடன் மஞ்சள் கிழங்கை எடுத்து அதில் இணைத்து, சொம்பின் கழுத்துப் பகுதியில் கட்டவேண்டும்.

இப்படியாக, கலசத்தை தயார் செய்ததும், தேங்காய்க் குடுமிப் பகுதியில், அம்மன் முகத்தை பதியுங்கள். அம்மன் முகம் இல்லாமலும் கூட செய்யலாம். அம்மனுக்கு, கருகமணி மாலையை சார்த்தவும். இரண்டு பக்கமும் தெரியும் விதமாக, காதோலையை செருகி வைக்கவும்.

கலசத்துக்கு வெள்ளைநிற வஸ்திரத்தை அணிவிக்கவும். வசதியிருப்பின் வெண்பட்டு சார்த்த லாம். அல்லது மஞ்சள் அரக்கு நிற ரவிக்கைத் துணியும் அணிவிக்கலாம். அத்துடன் பூமாலையும் அணிவிக்கலாம். இத்தனையும் சேர்ந்த கலசத்தில், ஸ்ரீமகாலக்ஷ்மியே வந்து எழுந்தருள்வதாக ஐதீகம்

காலையிலேயே  குளித்துவிட்டு பூஜையை ஆரமிக்க வேண்டும். வரலட்சுமி சிலை முன்பு, ஐந்து முக விளக்கேற்றி, அம்மனுக்கு உங்களால் முடித்ததை நிவேதனமாக வைத்து மலர் தூவி மந்திரங்கள் ஜபித்து அம்மனை வழிபட வேண்டும்.

இது போல மீண்டு மாலையில் பூஜை செய்து விரதத்தை முடித்துக்கொள்ளலாம். ஒரு சிலர் அடுத்த நாள் காலை இந்த பூஜையை முடிப்பது வழக்கம். பூஜையில் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் நாம் பிரசாதமாக உண்ணலாம்.

வரலட்சுமி விரதம் அன்று பூஜை செய்ய இயலாத பெண்கள் அடுத்து வரும் வெள்ளிக்கிழமை அன்று இந்த பூஜையை செய்யலாம். இந்த பூஜையை மனமுருகி செய்வதன் மூலம் அனைத்து ஐஸ்வர்யங்களும் உங்கள் வீட்டில் நிலைத்திருக்கும். செல்வத்திற்கு பஞ்சமே இருக்காது. அனைத்து பெண்களும் இந்த பூஜையில் கலந்து கொள்ளலாம்

பூஜை முடிவில் லட்சுமி தேவிக்கு மங்களம் பாடி ஆரத்தி எடுக்க வேண்டும்.தெய்வங்களுக்கு எடுக்கும் ஆரத்தி மஞ்சளும்,குங்குமம் கலந்த கலவையாக இருக்க வேண்டும்.ஆரத்தி எடுத்தவுடன்,யார் காலிலும் மிதிப்படாதவாறு மரத்தின் கீழ் ஊற்றிவிட வேண்டும்.

மறுநாள் காலையில், வரலட்சுமி அம்மனுக்கு எளிமையான பூஜை செய்து, வடக்கு முகமாக கலசத்தை நகர்த்தி அலங்காரத்தை அகற்ற வேண்டும்.  பூஜையின்போது” இந்த வருடம் போல் அடுத்த வருடமும் நான் பூஜை செய்யும் பாக்கியத்தை தர  வேண்டும் “என்று கூறி,அம்பாளை வழி அனுப்பும்விதமாக கலசத்தை வடக்கு முகமாக  நகர்த்த வேண்டும்.

பூஜையறையில் வாழையை  இலையை வைத்து, பச்சரிசி பரப்பிவைப்பது சிறப்பு. சிலர், அரிசிக்குப் பதிலாக நெல் பரப்பி வைப்பார்கள். முதல்நாள் பூஜையில் வைத்திருந்த அம்மன் முகம் கொண்ட கலசத்தை, எடுத்து வந்து  பரப்பிவைக்கப்பட்ட அரிசியின் மீது வைக்கவேண்டும். கலசத்தில் வரையப்பட்ட அம்மன் படம்  முகமாக அம்மன் இருப்பது நல்லது.

தொடர்ந்து கலசத்துக்கு மலர் மாலை சூட்டி,  கலசத்துக்கு முன்னே விளக்கேற்றி பூஜை சேய்ய வேண்டும். பூஜைக்கு அக்கம் பக்கத்தினரையும் அழைத்து பூஜை செய்வது நல்லது. பூஜையின்போது அம்மனுக்கு பிடித்த பாடல்களை பாடியும், இனிப்பு பலகாரங்களை  செய்து  நைவேத்தியம் செய்வதும் ந்லலது.

அதைத்தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட நோன்புச்சரடை எடுத்து,  அம்பாளை மனதார வேண்டிக்கொண்டு,, நோன்புச் சரடை பெண்கள் கழுத்தில் கட்டிக் கொள்ள லாம். அடுத்து ஆண்கள் கையில் கட்டிக் கொள்ளலாம். கணவரின் கையால் நோன்புச்சரடைக் கட்டிக் கொள்வது கூடுதல் பலனையும் நிறைவையும் தரும்.

விரதமிருப்பவர்கள், காலையில் உணவெடுத்துக் கொள்ளாமல் விரதம் நிறைவு செய்வது நல்லது. முடியாதவர்கள், கஞ்சி, பால் முதலானவற்றை எடுத்துக் கொள்ளலாம். பூஜை முடிவின்போது,  வீட்டிற்கு அழைக்கப்பட்டிருந்த சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு முதலான மங்கலப் பொருட்களும்,நைவேத்திய பிரசாதம் கொடுக்கலாம். முடிந்தால், ஜாக்கெட் பிட், புடவை ஆகியவற்றை வழங்கலாம்.

பூஜையில் வைத்திருந்த கலசத்தை அரிசி பாத்திரத்துள் வைக்க வேண்டும்.இவ்வாறு செய்வதால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. பூஜையில் பயன்படுத்திய  பச்சரிசி, கலச தேங்காய் போன்றவற்றை கொண்டு,அடுத்து வரும்  வெள்ளிக்கிழமையன்று உடைத்து பாயசம் செய்து நிவேத்தியம் செய்யலாம்.

இந்த வரலக்ஷ்மி பூஜையை அனுஷ்டித்தால், முற்பிறவியில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கல்யாண வரம் கைகூடிவரும். குழந்தைச் செல்வம் கிடைக்கும். வீட்டின் தரித்திரம் விலகும். ஐஸ்வரியம் பெருகும். ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழலாம்

கார்ட்டூன் கேலரி