பிரதமர் அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்த வரலட்சுமி சரத்குமார் ….!

https://twitter.com/varusarath/status/1242472907873239050

கொரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரதமர் மோடி நேற்று (மார்ச் 24) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.அதில், “அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதற்கு மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த முடிவுக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்து, தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

இதற்கு ஆதரவு தெரிவித்த வரலட்சுமி: நமக்கான தேர்வு செய்யப்பட்டு விட்டது. 21 நாள் பூட்டு. உங்கள் குடும்பங்களுடன் நல்ல நேரத்தைச் செலவிட, புதிய திறன்களைக் கற்க, புதிய சமையல் குறிப்பைச் செய்து பார்க்க, நண்பர்களுடன் இணையத்தில் விளையாட, எது வேண்டுமோ செய்யுங்கள். ஆனால் வீட்டிலேயே இருங்கள். முட்டாள்தனமாக நடந்து கொள்ளாதீர்கள். பாதுகாப்புடன் இருங்கள். இதை இன்னும் மோசமாக்க வேண்டாம் என பதிவிட்டுள்ளார் .