பி.ஜி.முத்தையா தயாரிப்பில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள படம் ‘டேனி’. திரையரங்குகள் திறக்கப்படாத சூழலில் ஆகஸ்ட் 1-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தை விளம்பரப்படுத்த வரலட்சுமி சரத்குமார் ஜூம் செயலி வழியே பேட்டியளித்தார். அதில் “மக்கள் செல்வி என்று போடச் சொல்லி வற்புறுத்துகிறீர்களாமே” என்ற கேள்விக்கு வரலட்சுமி சரத்குமார்
“மக்கள் செல்வி என்று கீர்த்தி சுரேஷை அழைத்து வருவதாகச் சொன்னார்கள். இது தொடர்பாக விசாரித்தபோது, மக்கள் செல்வி என்ற பட்டத்தை யாருமே யாருக்கும் கொடுக்கவில்லை என்று தெரிந்துகொண்டேன்.
என்னைப் பொறுத்தவரை எனது சினிமா வாழ்க்கையைத் தவிர, பல பேருக்கு உதவி மற்றும் சேவை செய்து வருவதால் ‘மக்கள் செல்வி’ என்ற பட்டத்தை எனக்குப் பல்வேறு அமைப்பினர் இணைந்து கொடுத்தார்கள் என தெரிவித்தார் .