வரலட்சுமி சரத்குமாரின் ‘டேனி’ விரைவில் ஜீ5 தளத்தில் ரிலீஸ்….!

சந்தானமூர்த்தி இயக்கத்தில் பி.ஜி.முத்தையா தயாரிப்பில் உருவாகியிருக்கும் டேனி திரைப்படம் ஜீ5 தளத்தில் விரைவில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருடன் யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, வேலராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் மார்ச் மாதம் முதலே திரையரங்குகள் மூடப்பட்டுள்ள காரணத்தால் திரைக்கு வர தயாராகிருக்கும் சில படங்கள் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.

You may have missed