வாரணாசி:

கோயில்கள் அருகே மது விற்பதற்கும், அசைவ உணவை விற்பதற்கும் தடை விதிக்க வாரணாசி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.


வாரணாசி மாநகராட்சி மேயர் மிருதுலா ஜெய்ஸ்பால் தலைமையில் நடந்த கூட்டத்தில், கோயில்களிலிருந்து 250 மீட்டர் தொலைவில் மதுபானங்களோ, அசைவ உணவோ விற்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான தீர்மானத்தை கவுன்சிலர் ராஜேஸ் யாதவ் கொண்டு வந்தார்.

அதில், ஹரித்துவார் மற்றும் அயோத்தியாவைப் போல், வாரணாசியிலும் 250 மீட்டர் தொலைவுக்கு மதுபானம் மற்றும் அசைவ உணவுகளை விற்க முழுமையாக தடை விதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

வாரணாசி மாநகராட்சி துணை மேயர் நரசிங் தாஸ் கூறும்போது, தடை விதிக்கும் உத்தேச தீர்மானம் மாநகராட்சி கூட்டத்தில் வைக்கப்படும். தீர்மானம் நிறைவேறியதும் மாநில அரசின் இறுதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என்றார்.

பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் உட்பட 2 ஆயிரம் கோயில்கள் உள்ளன.