வர்தா புயல் தாக்குதலில் இருந்து பல ஆயிரம் மக்களை காத்த இஸ்ரோ

மும்பை:

ர்தா புயலின் நகர்வு குறித்து இஸ்ரோ செயற்கைகோள் எச்சரித்ததால் பல ஆயிரம் பேர் தப்பினர்.

வங்கக்கடலில் உருவான வர்தா புயல் கடந்த 12ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சூறையாடிவிட்டு கரை கடந்தது. இந்த மாவட்டங்களில் பெரும்பாலான மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. மின்சார கம்பங்கள் சேதமடைந்தன. இன்னும் மின்சாரம் விநியோகம் முழுமடையவில்லை.

புயல் நகர்வு குறித்து இஸ்ரோ இஸ்ரோ ஏவிய இன்சாட் 3 டிஆர், ஸ்காட்சேட் -1 ஆகிய செயற்கைகோள்கள் முன் கூட்டியே தகவல் அளித்தன. இந்த எச்சரிக்கையினை இஸ்ரோ வெளியிட்டதன் அடிப்படையில் புயல் தாக்கக்கூடிய பகுதிகளில் வசித்த ஆயிரகணக்கான மக்களை அதிகாரிகள் மீட்டு பத்திரமான இடங்களில் தங்க வைத்தனர். ஆந்திர கடற்கரை பகுதியிலும் இதுபோல் மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

பருவநிலையை கணிக்கும் நவீன செயற்கை கோளான இன்சாட் 3 டிஆர், கடந்த செப்டம்பர் 8ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஸ்காட்சாட் -1 செயற்கைக் கோள் கடந்த செப்டம்பர் 26ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.