வர்தா புயல்: வட தமிழகத்தின் கடற்கரையோர பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை!

சென்னை,

ர்தா புயல் காரணமாக தமிழகத்தின் வடகடலோர  மாவட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வர்தா புயல்  மகாபலிபுரம் மற்றும் நெல்லூருக்கு இடையில் – சென்னை மற்றும் பழவேற்காடுக்கு அருகில் கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் வட கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்,  தெற்கு ஆந்திரா- சென்னை அருகே வர்தா புயல் நாளை  மலை கரையை கடக்கிறது.

வார்தா புயல் இப்பொழுது மிக பலமான காற்றழுத்த தாழ்வு மண்டலமா கஉருப்பெற்று  தெற்கு ஆந்திரா  மற்றும் வடக்கு தமிழகம் நோக்கி இடம் பெயர்கிறது.

இது காற்று பெயர்ச்சி மற்றும் உலர்ந்த காற்றினால், பலமிழந்து ஒரு சாதாரண புயலாக மாறி சென்னை பழவேற்காடுக்கு அருகில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வார்தா புயலின் காரணமாக திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சீபுரம் ஆகிய இடங்களில் டிசம்பர் 12ம் தேதி அன்று மழை பெய்யும்  என்றும், 12 மற்றும் 13ம் தேதிகளில் வேலூர் மாவட்டத்திலும் மழை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் காரணமாக  மணிக்கு 60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும்,  சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுர பகுதி மீனவர்கள் கடலுக்குள் கண்டிப்பாக செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

புயல் கரையை கடக்கும் பகுதிகளில் மழை அதிகமாக இருக்கும்.  வார்தா புயலினால் சென்னக்கும் நல்ல மழை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

புயல் போக்கினை கண்டறியும் உலகின் மூன்று உயர்ந்த மாதிரிகளில், ECMWF மற்றும் GFS ஆகியவை புயல் பழவேற்காடு அருகில் கரையை கடக்கும் எனவும், சென்னை மக்களின் அபிமான UKMET (BBC) தென் சென்னையில் புயல் கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கிறது.

இன்னும் ஒரு நாள் மட்டும் இருக்கும் நிலையில், புயலின் போக்கில் அதிக வேறுபாடுகள் இருக்க சாத்திய மில்லை என்றும்  அதிகபட்சம், 50-லிருந்து 75 கிலோமீட்டர் வரை மழை மற்றும் காற்று வீசும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி