வைகோ மீதான பல்வேறு வழக்குகள்! சென்னை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைப்பு

சென்னை:

திமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தமிழக அரசு தொடர்ந்து அவதூறு வழக்குகள் உள்பட  பல்வேறு வழக்குகளை சென்னை சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

வைகோ மீது, சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் முற்றுகை, காவிரி வாரியம் அமைக்க கோரி மறியல் மற்றும் சென்னை சேப்பாக்கத்தில் தடையை மீறி நடைபெற்ற ஈழத்தமிழர்கள் நினைவேந்தல் கூட்டம் உள்பட பல்வேறு அவதூறு வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளின்மீதான விசரணையை சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, வழக்கின் விசரணையை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்து உள்ளது.