அக்டோபர் 6-ம் தேதி சிம்ப்ளி செளத் தளத்தில் வெளியாகிறது பாலாவின் ‘வர்மா’….!

பாலா இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் ‘வர்மா’ என்ற பெயரில் ‘அர்ஜுன் ரெட்டி’. ரீமேக் செய்யப்பட்டது. ஆனால், இறுதிப் பிரதி திருப்தி அளிக்காததால் படம் கைவிடப்பட்டது.

கிரிசாயா இயக்கத்தில் துருவ் விக்ரம், பனிட்டா சந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘ஆதித்ய வர்மா’ படத்திற்கு முன்பே உருவானது .

பாலா இயக்கத்தில் உருவான ‘வர்மா’ படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகின.

தற்போது அக்டோபர் 6-ம் தேதி ஓடிடி தளத்தில் ‘வர்மா’ திரைப்படம் வெளியாவது உறுதியாகியுள்ளது. சிம்ப்ளி செளத் தளத்தில் இந்தியாவுக்கு வெளியே மட்டும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தளமே இந்தியாவுக்கு வெளியே மட்டுமே செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.