‘பப்பி’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான வருண் தற்போது கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விரைவில் இப்படம் பற்றிய முழு விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.