புதுடெல்லி:

எனக்கு வாக்களிக்காவிட்டால் முஸ்லிம்கள் தங்கள் காரியம் நிறைவேற என்னிடம் வரக்கூடாது என மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியதற்கு வருண்காந்தியும், ஹேமமாலினியும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


உத்திரப் பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக மேனகா காந்தி போட்டியிடுகிறார். பிலிப்பிட் மக்களவை தொகுதியில் அவரது மகன் வருண் காந்தி பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்நிலையில், சுல்தான்பூரில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசிய மேனகா காந்தி, சுல்தான்பூர் தொகுதியில் முஸ்லிம்களுக்காக பாஜக ஆட்சியில்தான் நிறைய செய்திருக்கிறோம். ஆனால், பாஜ வெற்றி பெறக் கூடாது என்று நினைக்கிறார்கள்.

நீங்கள் வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் எனக்கு கவலையில்லை. இந்த தொகுதியில் என் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. எனக்கு முஸ்லிம்கள் வாக்களிக்காவிட்டால், எந்த காரியம் நிறைவேறவும் என்னிடம் வரக்கூடாது என்று பேசினார்.

தன் தாயாரின் இத்தகைய பேச்சுக்கு வருண் காந்தி அதிருப்தி தெரிவித்துள்ளார். எனக்கு வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் தங்களுக்கு தேவைப்படும் போது என்னை அணுகலாம் என்று தெரிவித்தார்.

நான் முஸ்லிம்களுக்கு எதிரானவன் அல்ல. உதவி என்று யார் வந்தாலும், அவர் யார் என்று நான் பார்ப்பதில்லை. என் தந்தை சஞ்சய் காந்திக்கு வாக்களித்துள்ளீர்கள். பாட்டி இந்திரா காந்திக்கு வாக்களித்துள்ளீர்கள்.
எனக்கு வாக்களிக்காவிட்டாலும்,எந்த வேலையாக இருந்தாலும் தயவுசெய்து என்னிடம் வாருங்கள் என்று கூறியுள்ளார்.

இது குறித்து பாஜக எம்பி ஹேமமாலினி கூறும்போது, முத்தலாக் விசயத்தில் சிறுபான்மையினர் நமக்கு ஆதரவாக உள்ளனர். அவர்கள் வாக்களிக்காவிட்டாலும், ஒவ்வொருவருக்கும் சேவை செய்வது உங்கள் கடமை, யார் வாக்களித்தார்கள், யார் வாக்களிக்கவில்லை என்பது பிரச்சினை அல்ல. இத்தகைய உணர்வு எனக்கு ஒருபோதும் வராது என்றார்.

இது தொடர்பாக விளக்கம் கேட்டு சோனியா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து சோனியா காந்தி கூறும்போது, நான் பேசிய பேச்சின் ஒரு பகுதிதான் வெளியாகியுள்ளது. எங்கள் கட்சியின் சிறுபான்மை பிரிவு கூட்டத்தில் பேசிய எனது முழுமையான பேச்சை கேட்டால் நான் என்ன பேசினேன் என்று புரியும் என்று கூறியிருக்கிறார்.