சுல்தான்பூர்

த்திய அமைச்சரின் மேனகா காந்தியின் மகனும் சுல்தான்பூர் மக்களவை உறுப்பினருமான வருண் காந்தி எதிர்க்கட்சியினரை பாகிஸ்தானியர்கள் என கூறி உள்ளார்.

மத்திய அமைச்சர் மேனகா காந்தி பிலிபித் மக்களவை தொகுதியின் உறுப்பினர் ஆவார்.   அவர் மகன் வருண் காந்தி சுல்தான்பூர் மக்களவை தொகுதியின் உறுப்பினர் ஆவார்.    தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் வருண் காந்தி பிலிபித் தொகுதியிலும் மேனகா காந்தி சுல்தான்பூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மேனகா காந்திக்காக சுல்தான்பூரில் அவர் மகன் வருண் காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.   வருண் தனது பிரசாரத்தில் தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகிறார்.  இரு தினங்களுக்கு முன்பு பிலிபித் தொகுயில் அவர் தன்னை எதிர்த்து போட்டியிடும் பகுஜன் சமாஜ் – சமாஜ்வாதி கூட்டணி வேட்பாளரைக் குறித்து தரக்குறைவாக பேசியதாக புகார்கள் எழுந்தது.

சுல்தான்பூரில் ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வருண், “இந்த முறை நீங்கள் பாரதத் தாய்க்கு வாக்களியுங்கள்.   என் தாயும் தேர்தலில் போட்டியிடுகிறார்.  அவர் மிகவும் நல்லவர்.  கருணை உள்ளம் கொண்டவர்.  கடந்த 35 வருடங்களாக எந்த ஒரு ஊழல் புகாரும் அவர் மீது இல்லை.  ஆனாலும் நான் இப்போது எனது தாய்க்கு பதில் பாரத தாய்க்கு வாக்கு கேட்க வந்துள்ளேன்.   எனது தாய்க்கு இல்லை” என கூறி உள்ளார்.

அதன் பிறகு வருண் கூட்டத்தினர்ரிடம், “நீங்கள் பாரத தாய்க்கு வாக்களிக்க தயாரா?” என கேட்டுள்ளார்.   கூட்டத்தினரும் தயார் என பதில் அளித்துள்ளனர்.  அதன் பிறகு, “எனது தாயை எதிர்த்து போட்டியிடுபவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.   அவர்கள் பாகிஸ்தானியர்கள்.   இது சரி தானே?” என கேட்டுள்ளார்.

அத்துடன் “கரசேவையின் போது ராமபக்தர்கள் மீது துப்பாக்கி தோட்ட தாக்குதல் நடத்தியது யார்?” என வருண் கேட்டுள்ளார்.  கூட்டத்தில் ஒருவர், “முலாயம் சிங் யாதவ்” என பதில் அளித்துள்ளார்.   அதன் பிறகு வருண், “500 பேர் கொல்லப்பட்டனர்.   அவர்கள் ரத்தம் சிந்தியதை நம்மால் மறக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் வருடம் கர சேவகர்கள் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட லட்சக்கணக்கில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்திய போது அப்போதைய உ பி முதல்வர் முலாயம்சிங் யாதவ்  துப்பாக்கி சூடு நடந்த உத்தரவிட்டார்.

இந்த துப்பாக்கி சூடு நடத்தும் முன்பு முலாயம் அப்போதைய பிரதமர் வாஜ்பாயியிடம் தெரிவித்துள்ளார்.   அப்போது 56 பேர் இந்த துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதாக பிரதமர் வாஜ்பாய் தெரிவித்தார்.    ஆனால் அதை மறுத்து அந்த துப்பாக்கி சூட்டில் 28 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக முலாயம் சிங் யாதவ் தெரிவித்திருந்தார்.