டெல்லி:

100வயதான இந்திய முதல்தர கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி காலமானார். அவருக்கு வயது 10. வயது முதிர்வு காரணமாக அவர் மரணத்தை தழுவியதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் மிக மூத்த முதல்தர கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி  இன்று அதிகாலை 2.20 மணிக்கு தூக்கத்திலேயே காலமானாக அவரது உறவினர்கள் தெரிவித்து உள்ளனர்.  மும்பையில் உள்ள அவரத சொந்த வீட்டிலேயே காலமானாதாக அவரது  மருமகன் சுதர்ஷன் நானாவதி தெரிவித்தார்.  வசந்த் ராய்ஜிக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

வலது கை பேட்ஸ்மெனான ராய்ஜி  சிஏ பட்டப்படிப்பு படித்துள்ளார். மும்பை கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார்.  தனது 13 வயதிலேயே பாம்பா ஜிம்கானாவில் நடைபெற்ற போட்டியில் அவர் முதன்முதலாக அறிமுகமானார். 1940ம் ஆண்டுகளில் 9 முதல்தரப் போட்டிகளில் ஆடியுள்ளார். விஜய் மெர்சண்ட் தலைமையில் ஆடினார். இதில் 277 ரன்களை எடுத்துள்ளார் அதிகபட்ச ஸ்கோர் 68 ஆகும். அவர் இந்திய கிரிக்கெட் கிளப் ஒன்றுக்காக அறிமுகமானார்.

அவரது இறுதிச்சடங்கு தெற்கு மும்பையில் சந்தன்வாதி இடுகாட்டில்  நடைபெறவுள்ளது.

சமீபத்தில் வசந்த் ராய்ஜிக்கு  100 வயதானதையொட்டு சச்சின் டெண்டுல்கரும், ஸ்டீவ் வாஹும் இவரைச் சந்தித்தது வாழ்த்து கூறியது குறிப்பிடத்தக்கது.