சமூக வலைதளங்களில் வைரலாகும் கோவிந்த் வசந்தா வீடியோ…!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சி.பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த வருடம் ரிலீஸான படம் ‘96’. இப்படத்தின் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில், கதாநாயகியான ஜானு கதாபாத்திரம், இளையராஜா இசையில் பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி பாடிய பாடல்களைப் பாடுவதாகக் கதை அமைந்திருக்கும்.

அனைவரும் ரசித்த நிலையில் இதுகுறித்துப் பேட்டியளித்த இளையராஜா தகாத வார்த்தையை பயன்படுத்தியுள்ளார் இது சமூக வலைதளங்களில் இளையராஜாவுக்கு எதிராக குரல்கள் ஒலித்தன.

இந்நிலையில், இளையராஜாவின் சர்ச்சைக் கருத்துக்குத் தன்னுடைய இசை மூலம் பதில் அளித்துள்ளார் கோவிந்த் வசந்தா.

‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலில் இருந்து ஒரு சரணத்தின் சில வரிகளை வயலினில் வாசித்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள கோவிந்த் வசந்தா, ‘எப்போதுமே இளையராஜா ரசிகன் தான்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி