தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் வசந்த முல்லை படத்தில் நடித்துள்ளார் சிம்ஹா.

இந்தப் படத்தை ரமணன் புருஷோத்தமா இயக்கியுள்ளார். எஸ்.ஆர்.டி எண்டர்டையின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படம் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வருகிறது.

பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார். ஒளிப்பதிவாளராக கோபி அமர்நாத், இசையமைப்பாளராக பிரேமம் புகழ் ராஜேஷ் முருகேசன், எடிட்டராக விவேக் ஹர்ஷன் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் படத்தின் சிறப்பு முன்னோட்ட காட்சியை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். ருத்ரா எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்ஹா.