பிக் பாஸ் சீசன் 4 -ல் கலந்துகொள்கிறாரா இந்த ‘ஷக்கலக்க பேபி’….?

சமீப நாட்களில் மக்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்துள்ள ஒரு செய்தி விஜய் தொலைக்காட்சியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி பற்றிய செய்தி தான் .

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த ரியாலிடி ஷோ தமிழக மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றுள்ள ஒரு நிகழ்ச்சியாகும்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகும் பிரபலங்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது . அதன் படி அனேகமாக கலந்துகொள்ளப் போகிறவர்கள் என நம்பப்பட்டாலும், இதில் சிலர் இதற்கு மறுப்பு தெரிவித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகையும் பாடகியுமான வசுந்தரா தாஸ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது .

இதுவரை எந்த பட்டியலிலும் இவரது பெயர் வராத நிலையில், ரசிகர்களுக்கு இந்த செய்தி கண்டிப்பாக ஒரு ‘ஸ்வீட் சர்ப்ரைஸ்’-ஆக இருக்கும்.