Random image

ராஜபுத்திரர்கள் மீதான வழக்குகள் ரத்து : வசுந்தரா ராஜே.

ஜெய்ப்பூர்

ராஜபுத்திரர்கள் மீதான 24 கலவர வழக்குகளை ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ரத்து செய்துள்ளார்

கடந்த வருடம் ஜூலை மாதம் பல கிரிமினல் வழக்குகளில் சம்மந்தப்பட்ட அனந்த பால் சிங் என்னும் ராஜபுத்திரர் காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.   அதை எதிர்த்து ராஜபுத்திர சமூகத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர்கள்.  அதில் சன்வராட் என்னும் ஊரில் நடந்த போராட்டத்தில் கடும் கலவரம் ஏற்ப்பட்டது.

அப்போது நடந்த கலவரங்களை முன்னிட்டு ராஜபுத்திரர்கள் மீது 24 வழக்குகள் ராஜஸ்தான் அரசால் பதியப்பட்டுள்ளன.    இந்நிலையில் நேற்று முன் தினம் ராஜபுத்திர சமூகத்தின் தலைவர்கள் ராஜஸ்தான் முதல்வரை சந்தித்தனர்.   அப்போது இந்த வழக்குகளை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாஜக இளைஞர் அணி பயிற்சிக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், ராஜபுத்திரர்கள் தலைவருமான சுரேந்திர சிங் ஷெகாவத், “அனந்த பால் காவல்துறையினரால் கொல்லப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மீது அரசு வழக்கு பதிந்துள்ளது.   அதை ஒட்டி நாங்கள் அந்த இளைஞர்கள் மீது இரக்கம் காட்டுமாறு முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம்.  எங்கள் கோரிக்கையை முன்னிட்டு முதல்வர் அந்த வழக்குகளை ரத்து செய்ய ஒப்புக் கொண்டுள்ளார்.” என தெரிவித்துள்ளார்.

வசுந்தரா ராஜேவின் இந்த முடிவுக்கு  எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள்ன.    அடுத்து வரப்போகும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலை மனதில் கொண்டு இந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறி உள்ளன.