வாத்தி ‘Challenge Accepted ‘ ; அனிருத்துக்கு பதிலளிக்கும் சாந்தனு….!

விஜய்யின் அறுபத்தி நான்காம் படமான மாஸ்டர் படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய் சேதுபதியுடன் ஆண்ட்ரியா , ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் .

ஏப்ரல் 9-ம் தேதி படத்தை திரையங்குகளில் வெளியிட திட்டமிட்டு போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இதையடுத்து சென்னை நட்சத்திர ஹோட்டலில் வரும் 15-ம் தேதி மாஸ்டர் பட இசைவெளியீட்டு விழா நடைபெறுகிறது. ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் இந்த விழாவை நேரலையாக ஒளிபரப்புகிறது சன் டிவி. அதற்கான பிரத்யேக ட்ரெய்லரையும் சன் டிவி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் “வாத்தி கம்மிங் ஒத்து” பாடலுக்கு இசையமைப்பாளர் அனிரூத் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், வாத்தி ஸ்டெப் challenge, என பதிவிட்டிருந்தார் அனிருத் .

இந்நிலையில் challenge-சை எதிர்கொள்ளும் விதமாக இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்த நடிகர் சாந்தனு தனது மனைவியுடன் இப்பாடலுக்கு நடமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் வாத்தி ஸ்டெப் challenge ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.