வெளியானது ‘சுஃபியும் சுஜாதாயும்’ படத்தின் வதிக்கலு வெள்ளரிப்ரவு பாடல் வீடியோ…..!

2006-ம் ஆண்டு வெளியான பிரஜாபதி எனும் மலையாள படம் மூலமாக நடிப்பில் இறங்கினார் அதிதி.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பிறமொழி படங்களிலும் நடித்து வருகிறார் அதிதி.

சமீபத்தில் அதிதி ராவ் நடித்த சுஃபியும் சுஜாதாயும் மலையாள திரைப்பட ட்ரைலர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. நடிகர் தனுஷ் இந்த ட்ரைலரை வெளியிட்டார். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாக அமேசான் ப்ரைமில் வரும் ஜூலை 3-ம் தேதி வெளியாகவுள்ளது.

தற்போது படத்திலிருந்து வதிக்கலு வெள்ளரிப்ரவு பாடல் வீடியோ வெளியானது. ரொமான்டிக் பாடலான இந்த பாடலை அர்ஜுன் கிருஷ்ணா, நித்யா மற்றும் ஜியா உல்ஹா பாடியுள்ளனர். ஹரிநாராயணன் மற்றும் ஷபி பாடல் வரிகள் எழுதியுள்ளனர்.