Random image

கேரளா பாலியல் பலாத்கார பிஷப் பதவி நீக்கம்…வாடிகன் நடவடிக்கை

திருவனந்தபுரம்:

கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் சிக்கிய கேரளா பிஷப் பிராங்கோவை பதவி நீக்கம் செய்து வாடிகன் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கேரளா மாநிலம் கோட்டயம் ரோமன் கதோலிக்க பிஷப் பிராங்கோ மூலக்கல் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. கன்னியாஸ்திரியை 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை 13 தடவை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

தேவாலய நிர்வாகமும், போலீசும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கததை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. தற்போது சிறப்பு பிரிவு போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இது குறித்த கத்தோலிக்க தலைமையகமான வாடிகனுக்கு புகார் கடிதங்கள் அனுப்பப்பட்டது.

இதையடுத்து பிராங்கோவை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக வாடிகன் இன்று அறிவித்துள்ளது. இத்தகவலை டில்லியில் உள்ள கத்தோலிக்க பிஷப் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.