போப் ஆண்டவரை இந்தியா அழைக்கவில்லை!: வாட்டிகன் வருத்தம்

வாடிகன்

தெற்கு ஆசிய நாடுகளுக்கு வரும் போப் ஆண்டவர் இந்திய அரசு அழைக்காததால் இந்தியாவுக்கு வரமாட்டார் என வாடிகன் தெரிவித்துள்ளது.

அனைத்து உலக கத்தோலிக்க கிறித்துவர்களுக்கு தலைமை வகிப்பவர் வாடிகன் நகரத்தில் உள்ள போப் ஆண்டவர்.   தலைமை குருவான இவர் தெற்காசிய நாடுகளுக்கு வரும் பயணம் பற்றி வாடிகனில் உள்ள போப் ஆண்டவ அலுவலகம் அறிவிப்பு அளித்துள்ளது.

அந்த அறிவிப்பில், “போப் ஆண்டவர் தெற்கு ஆசிய நாடுகளுக்கு வருகை புரிகிறார்.  அதில் மியான்மர், வங்க தேசம் ஆகிய நாடுகளும் அடக்கம்.  அவர் இந்தியாவுக்கும் வர விரும்பினார்.  இது குறித்து இந்திய கத்தோலிக்க சபைக்கு தகவல் அனுப்பினோம்.   அவர்களும் பல முறை இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  ஆனால் இந்திய அரசு அவர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கவில்லை.   அரசு அழைப்பு இல்லாததால் அவர் இந்தியா வரமாட்டார்” என தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய கதோலிக்க சபையின் அதிகாரியான ரவீஷ் குமார். “இந்தியாவுக்கும் கிறித்துவத்துக்கும் கிட்டத்தட்ட 2000 வருடங்கள் தொடர்பு உள்ளது.   இந்திய கிறுத்துவர்கள் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பல வகையிலும் சேவை செய்துள்ளார்கள். இந்திய அரசிடம் இருந்து அதிகார பூர்வ அழைப்பு இல்லாததால் அவர் வருகை தராத போதிலும் இந்திய கத்தோலிக்க பிரதிநிதிகள் அவரை மியான்மரில் சென்று சந்திக்க உள்ளோம்.  மேலும் இந்தியாவை அதிகார பூர்வ அழைப்பு அனுப்பி அவரை வரும் 2018ஆம் வருடம் இந்தியாவுக்கு வரவழைக்க தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் போப் ஆண்டவர் மதத்தலைவர் மட்டும் அல்லாமல் வாடிகன் நகரம் என அழைக்கப்படும் நாட்டின் தலைவரும் என்பதால் அவருக்கு அரசு சார்பில் அழைப்பு விடுத்தால் மட்டுமே முழுப் பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.