கர்நாடகாவில் 12ம் தேதி பந்த் ரத்து….வாட்டாள் நாகராஜ்

பெங்களூரு:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த வகையில் கன்னட அமைப்புகள் சார்பில் வரும் 12ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கை மே 3ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து முழு அடைப்பு போராட்டம் ரத்து செய்யப்பட்டதாக வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,‘‘மே 3ம் தேதி நடக்கும் அடுத்தக்கட்ட விசாரணைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும். எனினும் கர்நாடகாவில் எக்காரணம் கொண்டும் ரஜினி, கமல் படங்களை திரையிட விட மாட்டோம். மாநிலம் முழுவதும் தேர்வுகள் நடைபெறுவதால் மாணவர்கள் நலனையும் கருத்தில் கொண்டுள்ளோம். உச்சநீதிமன்றம் இன்றைய விசாரணையில் காவிரி மேலாண்மை வாரியம் பற்றி கூறவில்லை’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.