டிவி ஆண்ட்ராய்டு போன்கள் சிஐஏ-ன் உளவுக்கருவிகள்!- ஆதாரங்களுடன் விக்கிலீக்ஸ்

உலகின் பிரபல உளவு அமைப்பான அமெரிக்காவின் Central Intelligence Agency என்கிற சிஐஏ

குறித்த முக்கிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சிஐ ஏ குறித்து 8 ஆயிரத்து 761 ஆவணங்கள் வெளியாகியிருப்பதாகவும் இதுவரை இந்தளவு ரகசியங்கள் கசிந்த து இதுதான் முதல்முறை ன்று கூறப்படுகிறது.

‘Vault 7’ என்ற பெயரில், அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ பற்றிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ். CIA பற்றிய ரகசிய ஆவணங்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் லீக்காவது இதுதான் முதல்முறை என்கிறது விக்கிலீக்ஸ். சிஐஏ-வின் ரகசிய ஹாக்கிங் திட்டத்தைப் பற்றிய 8,761 ஆவணங்கள் வெளியாகியுள்ளன.     

மேலும் இந்த ஆவணங்களில் ஆப்பிள் ஐபோன், கூகுளின் ஆண்ட்ராய்ட், சாம்சங் டிவி-க்கள், விண்டோஸ் போன்றவற்றை ஹாக் செய்து ரகசிய மைக்ரோபோனாகப் பயன்படுத்தும் அளவுக்கு சிஐஏ திட்டமிட்டிருந்ததை விக்கிலீக்ஸ் விளக்கி உள்ளது.

இதுபற்றி, ஃபேஸ்புக்கில் லைவ் பிரஸ் மீட் வைக்க ஜூலியன் அசாஞ்சே முயற்சித்தபோது, சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.