இன்று: காவிரி விவகாரத்தில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து தனது மத்திய அமைச்சர் பதவியை அமரர் வாழப்பாடியார் ராஜினாமா செய்த தினம்… (29, ஜூலை 1991)
பத்திரிகையாளர்  எம்.பி. திருஞானம் அவர்களின் முகநூல் பதிவு:
 

வாழப்பாடியார்
வாழப்பாடியார்

O
தமிழ்நாடு  காங்கிரஸ் தலைவர்  பொறுப்பில் இருந்தபோது, வாழப்பாடியாரை  அவருக்குப் பிடித்தமான
தொழிலாளர் நலத் துறை  அமைச்சராக   பிரதமர் நரசிம்ம ராவ்  நியமனம் செய்தார் !
O
தமிழ்நாடு அரசுக்கும்   கர்னாடக அரசுக்கும்  இடையில், காவேரி நீர் பங்கீடு  பிரச்சனையில், முக்கியத் திருப்பம் வந்தது !
மத்திய அரசு,  நடுவு நிலை வகிக்காமல்,  ஒருதலைப் பட்சமாக – கர்நாடகத்திற்கு ஆதரவாக  உச்ச நீதிமன்ற
நடவடிக்கைகளை  திருப்பினார்,  பிரதமர் நரசிம்ம ராவ் !
இது, தமிழ்நாட்டுக்கு  எதிரான – நீதிக்குப் புறம்பான  செயல் என்று,  நரசிம்ம ராவுக்கு, கடிதம் எழுதினார் !
பத்து நாட்கள் வரை  பதில் இல்லை !
நண்பர்களைக்கூட  கலந்து ஆலோசிக்கவில்லை !
தொழிலாளர் நலத் துறை  அமைச்சர் பதவியை  ஆரவாரம் இல்லாமல்  ராஜினாமா செய்துவிட்டு,
டெல்லியிலிருந்து பறந்து  வந்தார் !
”இவரை வெச்சி  நாலு காரியம் செய்துக்கலாம் என்று  பார்த்தால்,  நம்ம தலைவரு  இப்படி செய்துட்டாரே…” என்று,  தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளும்  MP, MLAக்களும்   என்னிடம் சொல்லி  வருத்தப்பட்டார்கள் !
காமராஜருடன் வாழப்பாடியார்
காமராஜருடன் வாழப்பாடியார்O

 
நான் வாழப்பாடியாரிடம் ” உங்க ஆதரவாளர்கள், வாராதுபோல் வந்த  மத்திய அமைச்சர் பதவியை  ராஜினாமா செய்ததில்  வருத்தமாக இருக்கிறார்கள்..” என்றேன் !
”நீ என்னப்பா நினைக்கிறே….  அதை சொல்லு….” என்றார் !
கொஞ்சம் யோசிச்சு, ”இந்திரா காந்தி,  ராஜீவ் காந்தி ரெண்டுபேரும் உங்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப் போறாங்க என்று, பரபரப்பாக  செய்தி வரும். ஆனா,  அவுங்க யாரும் கொடுக்காத  பதவியை  நரசிம்ம ராவ்தானே கொடுத்தார்.
அந்த பதவியை  தூக்கிக் கடாசுனா எப்படி ?…” என்றேன்.
” நரசிம்ம ராவுக்கு  பிரதமரா நீடிக்க  கர்நாடகாவில் உள்ள  காங்கிரஸ்  எம்.பி.க்களின் தயவு தேவை. அதுக்காக, அவர் நெளிகிறார்.   வலைகிறார்….  இதை நான்  வெளியே சொல்ல முடியாது. ஆனா,  நான் என் போக்குல  என் பதவியை ராஜினாமா செய்வதை யார் தடுக்க முடியும் ? ”  என்றவர், “” யோவ்… அதெல்லாம் இருக்கட்டும், கொள்கை முக்கியமா?
பதவி முக்கியமா ? ” என்று  என்னை கேட்டார் !
நான், ”கொள்கைதான்  முக்கியம்” என்று  பளிச் பதில் சொன்னேன் !
“இப்ப சொல்லு,  ”நான் செய்தது – சரியா, தப்பா ?” என்றார் !
” நீங்க செய்தது சரிதான்..”என்று, வாய்ஸ் குறைத்து, சொன்னேன் !
சதாம் ஹூசைனுடன் வாழப்பாடியார்
சதாம் ஹூசைனுடன் வாழப்பாடியார்

அவர்,,  ”ஏம்ப்பா…  சத்தம் கொறைச்சலா இருக்கு ?” என்று கேட்டுவிட்டு,சொன்னார் :”யோவ் பதவி – வரும், போகும்.  காவேரி  வரலாறு என்பது,  தன் போக்கில் போகும்.திரும்ப வராது….   நீகூட என்னை புரிஞ்சிக்கலியே…” என்று சொல்லிவிட்டு, வருத்தப்பட்டார் !
‘என்னோட நண்பர்  மத்திய அமைச்சர்…’ என்று,  மகிழ்ச்சியாக  சொல்லிக்கொண்டிருந்த  எனக்கு,மகிழ்ச்சி – மிஸ் ஆன நாள்.. வாழப்பாடியார்  மத்திய அமைச்சர் பதவியை  காவிரி நீர் பிரச்சனைக்காக உதறிய பொன்னாள்,…
1991   ஜூலை 29…    25 ஆண்டுகள் ஓடிவிட்டது !
O தமிழர் நலனுக்காக   தனது கண்டனத்தை பதிவு செய்ய, தனக்கு முதல்முதலாகக்   கிடைத்த  மத்திய அமைச்சர் பதவியை,  உதறித் தள்ளிய என்னோட நண்பர்   வாழப்பாடியார், மனிதரில் புனிதர் !”