கோவை:

கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து  17பேர்உயிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை உடனே தகனம் செய்தது ஏன் ? என்று கேள்வி எழுப்பி உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, காவல்துறையினரின் இந்த அவசர நடவடிக்கையை விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே 17 பேர் பலியான  நாதுர் கிராமத்திற்கு விஜயம் செய்தார். அங்கு சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சிந்தனைசெல்வன், இந்த விபத்தில் பலியான 17பேரின் சடலங்களுக்கு, அவர்களது குடும்பத்தினர்  குடும்பங்கள் முறையான சடங்குகளை நடத்த விடாமல், காவல்துறையினர், பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை தகனம் செய்ததாக குற்றம் சாட்டினார்.

ஏன் இவ்வளவு அவசரமாக பொலிஸ் தகனம் செய்தார்கள்? இதை விசாரிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் உரிமைகளுக்காக போராடும் செயற்பாட்டாளர்கள் மீது காவல்துறையினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை மோசமானது என்றும் விமர்சித்தார்.

“நிலச்சரிவுகளைத் தடுக்க அத்தியாவசிய‘ பாதுகாப்பு ’சுவர் மற்றும் பிற வகையான கட்டுமானங் கள் கட்டப்பட வேண்டும் என்பதை  ஒப்புக்கொள்வதாக கூறியவர்,  அனைத்து வகையான கட்டு மானங்களும் கண்டிப்பாக விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த இந்த வருகையானது,  தலித்துகளுக்கு எதிரான பாரபட்சமான நடவடிக்கையாக சுவர் கட்டப்பட்டதா என்பதை உறுதிப்படுத்தவே என்றவர், இந்த பகுதி சாய்வாக இருப்பதாகவும், சாய்வில் ஒன்றன் கீழே வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்று தெரிவித்தவர்,  மக்களை விலங்குகளிட மிருந்து விலக்கி வைப்பதற்காக அல்லது நிலச்சரிவுகளுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு சுவரைக் கட்டுவது உண்மையில் இங்கே ஒரு பொதுவான நடைமுறை யாகும் என்றும் தெரிவித்து உள்ளார்.