தகுதி நீக்கம் செல்லாது என 3வது நீதிபதி தீர்ப்பு வழங்குவார்: திருமாவளவன் நம்பிக்கை

சென்னை:

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில்,  3வது நீதிபதி தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு வழங்குவார் என நம்புவதாக திருமாவளவன் கூறி உள்ளார்.

தமிழகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்த்த  19 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், தலைமை  நீதிபதி சபாநாயகர் உத்தரவு செல்லும் என்றும், மற்றொரு நீதிபதியாயான சுந்தர்  சபாநாயகர் உத்தரவு செல்லாது என்றும் அறிவித்து, வழக்கை 3வது நீதிபதியின் விசாரணைக்கு சிபாரிசு செய்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,  தகுதி நீக்க வழக்கில் இருதரப்பினரும் மகிழ்ச்சி அடைய முடியாத தீர்ப்பு என்று  கூறினார்.

பொதுமக்கள் எதிர்பாராத தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி உள்ளது என்றும் மிகக்குறுகிய காலத்தில் வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும்  தகுதி நீக்கம் செல்லாதென் 3வது நீதிபதி தீர்ப்பு வழங்குவார் என நம்புவதாக திருமாவளவன் தெரிவித்தார்,