பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம்பெறாது: திருமாவளவன்

 

சென்னை:

தேர்தலின்போது பாஜக, பாமக போன்ற கட்சிகள் இடம்பெறும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது என அதன் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்தைகளை முடுக்கிவிட்டுள்ளன. தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த சுறுசுறுப்பாக  களப்பணியாற்றி வருகின்றன.

இந்த நிலையில், பாஜக- பாமக இடம்பெறும் கூட்டணியில் கொள்ளை ரீதியாக இடம்பெறாது தொல் திருமாவளவன் கூறி உள்ளார்.

கடந்த சில சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் திமுக கூட்டணியில் இடம்பெற்று வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போதும் திமுக கூட்டணியில் தொடர்பாக தெரிவித்து வருகிறது. ஆனால்,  திமுக இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்,  பாஜக-பாமக இடம்பெறும் கூட்டணியில் கொள்ளை ரீதியாக இடம்பெறாது என்றவர், இம்மாத இறுதிக்குள் நாடாளுமன்ற தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு திமுக அழைக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.

மேலும், கட்சி நலனைப்போல் தேசிய நலன் முக்கியமானது என்ற திருமா, பாஜக, பாமக போன்ற கட்சிகள் இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இடம்பெற மாட்டோம் என்றும், சனாதன சக்தி களுக்கு எதிராக நாங்கள் கூட்டணி அமைப்போம் என்றும் கூறினார்.

கார்ட்டூன் கேலரி