நடிகை காயத்ரி மீது அரசியல் கட்சியினர் கமிஷனர் ஆபிசில் புகார்..

டிகை காயத்ரி ரகுராம் பா.ஜ கட்சியில் இருக்கிறார். அவருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் பல சமயங்களில் மோதல் நடக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென்சென்னை கிழக்கு மாவட்ட அமைப் பாளர் வக்கீல் பன்னீர்செல்வம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காயத்ரி ரகுராம் மீது நேற்று புகார் அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது.

 


எங்கள் கட்சியின் தலைவர் தொல். திருமா வளவன் ஏழை-எளிய மக்களுக்காக பாடு பட்டு வருகிறார். சாதி, மத, பேதமின்றி சமூக நீதிக்காக போராடி வரும் அவரைப் பற்றி சாதியின் பெயரை அடையாளப் படுத்தியும், மதத்தை அடையாளப் படுத்தியும் நடிகை காயத்ரி ரகுராம் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வீடியோ மற்றும் ஆடியோ வெளியிட்டு வருகிறார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் ஆடியோக்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நடிகை காயத்ரி சார்லி சாப்லின், விசில் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்ப துடன் நடன இயக்குனராகவும் பல படங்களுக்கு பணியாற்றி இருக்கிறார்.