சென்னை,

வாகன ரெஜிஸ்ட்ரேசன் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், வண்டிகள் ரெஜிஸ்ட்ரேசன், ஓட்டுனர் உரிமம், எல்எல்ஆர், உரிமம் புதுப்பித்தல் போன்றவற்றுக்கான கட்டணம் திடீரென பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்த திடீர் உயர்வு பொதுமக்களிடையே அதிரிச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வாகன பதிவு கட்டணங்கள் குறித்து  மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நிர்ணயிக்கும். இதற்கான அறிவிப்பு  கடந்த ஆண்டு டிசம்பர் 29ம் தேதி அரசிதழில் வெளியிட்டது.

அதை தொடர்ந்து  புதிய கட்டணம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் 81 வட்டார போக்குவரத்து அலுவலகம், 54 பகுதி அலுவலகம் செயல்பட்டு வருகின்றன.

இந்த அதிரடி கட்டண உயர்வு காரணமாக, அனைத்து வாகனங்களுக்கும் எல்எல்ஆர் பெற ரூ.30  என இருந்தது 70 ரூபாய் ஏற்றி  ரூ.100ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர டெஸ்ட் கட்டணம் என்று தனியாக ரூ.50 செலுத்த வேண்டும்.

சர்வதே ஓட்டுனர் உரிமம் பெற ரூ.500 என இருந்தது தற்போது ரூ.1000 என உயர்ந்துள்ளது.

இது போன்று அனைத்து கட்டணங்களும் திடீரென பல மடங்கு உயர்ந்துள்ளதால்  பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.